பதிவு செய்த நாள்
05
மே
2025
04:05
உத்திரமேரூர்; உத்திரமேரூரில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோத்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பிரம்மோத்சவம் நடக்கும் பத்து நாட்களிலும், பெருமாளுக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. பின், ஒவ்வொரு நாளும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் விதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான, நேற்று காலை 8:00 மணிக்கு பெருமாள் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார். அதை தொடர்ந்து, இன்று காலை 8:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்தார். இதில், திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வாக நாளை காலை 4:00 மணிக்கு கருட சேவையும், வரும் 10ம் தேதி, காலை 6:00 மணிக்கு திருத்தேர் உத்சவமும் நடக்க உள்ளது.