கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையை சேர்ந்தவர் முகமது அப்சர்,35; இவர், கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் புதிய வீடு கட்ட நேற்று அஸ்திவாரம் தோண்டினார். கட்டுமான தொழிலாளர்கள் அஸ்திவாரம் தோண்டியபோது, பூமிக்கடியில் 3 அடி ஆழத்தில், பழங்கால சிலைகள் கிடைத்தன. அதில், 3 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை, சிதைந்த நிலையில் திருவாச்சி, அஸ்திர தேவர், ஒரு அடி உயரமுள்ள நந்தி வாகனம் கண்டெடுக்கப்பட்டன. தகவலறிந்த தாசில்தார் பிரகாஷ் மற்றும் காட்டுமன்னார்கோவில் போலீசார், சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏதேனும் சிலைகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகளை தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.