மகா சாத்தையனார் கோயில் விழா; வீடுகள் தோறும் காவடி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2025 02:05
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில் விழா ஏப்.30 ல் காப்பு கட்டுகளுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற வந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கோயில் இருந்து வடம் எடுத்தல் நிகழ்ச்சியும், நேற்று அரச மரத்தில் தங்குமிடம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று மாலை சாத்தனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள 18 கிராமத்தில் விரதம் இருந்த பக்தர்கள், உறவினர்கள் முன்னிலையில், காவடி கட்டி வழிபாடு செய்தனர். தொடர்ந்து கட்டப்பட்ட காவடியை சுமந்தவாறு வீடுகள் தோறும் பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இன்று மாலை நடைபெறும் முக்கிய விழாவான எருதுகட்டு விழாவில், காவடி, அலகு குத்திய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.