திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் சித்திரை பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2025 11:05
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் விசாக நட்சத்திர சித்திரை பெருவிழாவில் சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத விசாக நட்சத்திர பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 5ம் நாளான நேற்று காலை வள்ளி தேவ சேனா சமேத பாலசுப்ரமணியருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 7ம் நாள் மாலை வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், 11ம் தேதி ஞாயிற்றுக் காலை தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், விஸ்வகர்மா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.