பதிவு செய்த நாள்
08
மே
2025
12:05
உடுமலை; உடுமலை டி.வி., பட்டணம் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. உடுமலை தளி ரோடு டி.வி., பட்டணம் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழா ஏப்., 29ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. சக்தி மதகில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, கம்பம் போடப்பட்டது. திருமூர்த்திமலை, கொடுமுடி உள்ளிட்ட புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர். நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு சீர் எடுத்து வந்து, அம்மன் திருக்கல்யாணம், மாலை, 5:00 மணிக்கு நடந்தது. நேற்று பொங்கல், மாவிளக்கு எடுத்து வருதல், பூவோடு எடுத்தல் நடைபெற்றது. இன்று அம்மன் வீதி உலா, மஞ்சள் நீராடுதலும், மாலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.