திருவொற்றியூர்; திருவொற்றியூர், ஜெய்ஷிந்த் நகரில் ஸ்ரீ காமகோடி பீடாதிபதி காஞ்சி பெரியவரால் கால்கோள் நிறுவப்பட்டு அருள் ஆசி வழங்கிய ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவிலில் 45ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக முல்லை நகர் பொதுமக்கள் சார்பில் மலர் மாலை மாங்கல்யம் வஸ்திரங்கள் பூ பழம் வளையல்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் பிரகாரத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை ஊஞ்சலில் அமர வைத்து பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க காப்பு கட்டுதல் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் யாக குண்டம் அமைத்து சுவாமிக்கு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் தாலி கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.