பதிவு செய்த நாள்
09
மே
2025
08:05
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் அஸ்திர யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் நாட்டின் முப்படைகள் இணைந்து, 7ம் தேதி நள்ளிரவில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அளித்தனர். அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த பதிலடி அளித்து வரும் இந்தியா, முப்படைகளையும் களமிறக்கி உள்ளது. நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்களின் நலனுக்காக, கோவில்களில் மிருத்யுஞ்சய ஹோமம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் அஸ்திர யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.