பதிவு செய்த நாள்
09
மே
2025
08:05
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி உள்ளிட்ட ஏழு சிவன் கோவில்களை உள்ளடக்கி சப்தஸ்தான (ஏழூர்) திருவிழா நடந்ததாக வரலாறு உள்ளது.
கடந்த நுாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருவிழா நின்று போனது. இதையடுத்து ஏழூர் மக்கள் ஒன்று கூடி, மீண்டும் சப்தஸ்தான விழாவை நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருக்கானுார் கோவில் இருந்து பல்லாக்காலில் சாமி அலங்கரிக்கப்பட்டு, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி வரை சென்றது. பிறகு, திருச்செந்தலை சிவன் கோவிலில் நடைபெற்ற மீனாட்சி கல்யாணவைபவத்தில் கரும்பேஸ்வரர் கலந்து கொண்டார். ஏழூர்களிலும் பல்லக்கில் வலம் வந்த சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர், மீண்டும் திருக்கானுாரை அடைந்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கோபி மற்றும் ஏழு கிராம மக்கள் ஒங்கிணைந்து செய்து இருந்தனர். விழாவில், திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன், எம்.பி., முரசொலி, ஹிந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் இணை கமிஷனர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.