திருப்நபதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2025 10:05
நாகர்கோவில் : திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி பவனி, சமய சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவில் இன்று காலை 7 மணிக்கு திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர்வடம் தொட்டு இழுத்தலும், தேரோட்டமும் நடந்தது. ஏராமளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று இரவு சுவாமி ரிஷப வகானத்தில் பவனி வருதல், சப்தவர்ணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.