பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2025 10:05
புதுச்சேரி; பஞ்சவடீயில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வசந்த உற்சவம் நடக்கிறது.
இன்று பூர்வாங்க பூஜையுடன் துவங்கும் வசந்த உற்சவத்தையொட்டி, மூன்று நாட்களும் மூலவர் சீதாதேவி சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு காலையில் சிறப்பு அலங்காரங்களும், மாலையில் உற்சவமூர்த்திகள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.அதன்படி, இன்று புஷ்ப விதானத்திலும், நாளை (10ம் தேதி) காய்கறி விதானத்திலும், 11ம் தேதி பழங்கள் விதானத்திலும் அலங்கார சேவை நடக்கிறது. நாளை 10ம் தேதி காலை 10:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது.வசந்த உற்சவம் நடைபெறும் மூன்று நாட்களிலும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.