Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026  தனுசு : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026 தனுசு : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை)
விருச்சிகம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026

பதிவு செய்த நாள்

09 மே
2025
02:05

விசாகம்.. முயற்சி வெற்றியாகும்: மங்களகாரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழிலில் முன்னேற்றம், பணியில் எதிர்பார்த்த உயர்வு, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம்,  சமூக அந்தஸ்து, குடும்பத்தில் மகிழ்ச்சி, பணப்புழக்கம், படிப்பில் வெற்றியை வழங்குவார். 4ம் பாதத்தினருக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உடல்நலக்குறைவு, உறவினரிடம் விரோதம்,  தொழிலில் தடை, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்.

பார்வைகளின் பலன் 
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2,3ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை ஜென்ம ராசி மற்றும் 3, 5 ம் இடங்களுக்கு வழங்குவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும்.  கனவுகள் இப்போது நனவாகும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். உடல் பாதிப்பு விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கூடும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் ஆசி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு, 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் வீண் செலவு கட்டுப்படும். நெருக்கடி குறையும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத வரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உழைப்பு, அலைச்சல்களின் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சகோதரரால் சங்கடம், நண்பர்களிடம் பகை  உண்டாகும்.

 சனி சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், மனம் குழப்பம் அடையும். பிள்ளைகளால் நெருக்கடி, கணவன் மனைவிக்குள் பிரச்னை, தவறானவர்களின் நட்பால் அவமானம், பூர்வீக சொத்தில் வழக்கு ஏற்படும். மார்ச் 6 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உடல் பாதிப்புகள் விலகும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தொழில், உத்தியோகம் முன்னேற்றமடையும். எதிர்ப்பு விலகும்.  இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை, 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உழைப்பு அதிகரிக்கும்.  தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளால் சச்சரவுகள் தோன்றும். தவறான நட்பால் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் 5ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால், மனதில் இருந்த நிம்மதி போகும். பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். உறவுகளுடன் பகை, உயர்கல்வி முயற்சியில் தடை, பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும்.

ராகு, கேது சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால் மனம் குழப்பமடையும், தொழிலில் பிரச்னை, வேலையில் சங்கடம், குடும்பத்தில் நெருக்கடி, அந்நியரால் அவமானம், பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேரும்.  அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் முடிவிற்கு வரும். 4ம் பாதத்தினருக்கு ராகு 4 ல், கேது 10 ல் சஞ்சரிப்பதால் சாதாரணமாக முடிய வேண்டிய வேலைகளில் இழுபறி ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை உருவாகும். தொழிலில் தடைகள் உண்டாகும்.  வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்வர்.  

சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு  ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2026 ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களிலும் தன் 3, 6, 10, 11 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில்  முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். மன நிலையில் தெளிவை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். அரசுவழியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். 

செவ்வாய் சஞ்சாரம்
1,2,3 ம்  பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 29, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – மே 26 காலங்களிலும், ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் தன் 3, 6, 11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சியை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். கனவுகளை நனவாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கை வெற்றியாக்குவார்.

பொதுப்பலன்
1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவின் சஞ்சாரமும், அக்.8 முதல் நவ. 8 வரை கடக குருவின் பார்வைகளும், லாப கேதுவும், மார்ச் 6 முதல் 6 ம் இட சனியும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், அக். 8 முதல் நவ. 8 வரை கடக குருவும், 4 பாதத்தினருக்கும் சூரியனும், செவ்வாயும் யோகப் பலன்களை வழங்க காத்திருக்கின்றனர்.

தொழில் 
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட இடையூறு விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜன்சி, ஜூவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண்மை, ஏற்றுமதி இறக்குமதி, மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், ஆன்லைன் பிசினஸ், எலக்ட்ரானிக்ஸ், அலைபேசி, நவீன சாதனங்கள் தொழில்கள் முன்னேற்றம் பெறும். 

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் பணிச்சுமை ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். 

பெண்கள் 
குரு பகவானின் சஞ்சாரம், பார்வைகளால் எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். பொன், பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி
மாணவர்களுக்கு இக்காலம் யோக காலமாக அமையும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தகுதியின் அடிப்படையில் விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.

உடல்நிலை
1,2,3 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள், பி.பி, சுவாசக்கோளாறு, சுகர் என அவதிப்பட்ட நிலை மாறும். 4 ம் பாதத்தினருக்கு உடல்நிலையில் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும். 

குடும்பம்
குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும் குடும்ப நெருக்கடிகளை நீக்கும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.  பிள்ளைகளின் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். புதிய வாகனம், சொத்து சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் புதுவீட்டில் பால் காய்ச்சுவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

அனுஷம்.. விடாமுயற்சி தேவை

கர்மக்காரகனான சனியை நட்சத்திர அதிபதியாகவும், சகோதர காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், கையில் எடுத்த வேலையை வெற்றிகரமாக முடிப்பதில் திறமைசாலிகள். அச்சம் என்பதை அறியாத நீங்கள் மற்றவரால் செய்ய முடியாத செயல்களை செய்வதில் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். ஒரு முடிவிற்கு நீங்கள் வந்துவிட்டால் அதை எவராலும் மாற்ற முடியாமல் போகும். அத்தகைய வலிமை கொண்ட உங்களுக்கு குரு பகவான் மே11 முதல் 8ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 8ம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம், அஷ்டம ஸ்தானம், மறைவு ஸ்தானம் என கூறலாம். 8 ம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் போதெல்லாம் சங்கடம், நெருக்கடி தோன்றும். செல்வாக்கு குறையும். ராசிக்கு 8 ம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில், அரசாளும் மன்னனாக இருந்தாலும் அவனது செல்வாக்கு, சொல்வாக்கு எல்லாமும் மறைய வாய்ப்புண்டு. 

பார்வைகளின் பலன் 
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், பலவகையிலும் செலவுகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியாக உறங்கினோம் என்ற நிலை ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்படும். புதிதாக இடம் வாங்குதல், வீடு வாங்குதல், இருக்கும் வீட்டைப் புதுப்பித்து ரசனைக்கேற்ற விதத்தில் மாற்றுதல் என செலவுகள் ஏற்படும். குடும்பத்தை நிர்வகிப்பதற்கு தேவையான பணம் கிடைக்கும். கடனாக கேட்ட இடத்தில் இருந்தும் பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பயணத்தின் வழியே நன்மை உண்டாகும். பட்டம், பதவி என அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தாய் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையால் குணமாகும். சிலர் கோயில் வேண்டுதலை நிறைவேற்றுவர். உழைப்பும், அதில் சங்கடம் அதிகரித்தாலும் உங்கள் மனம் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாது. 

சனி சஞ்சாரம்  
2026 மார்ச் 6 வரை சுக ஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், வேலைப்பளு கூடும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். மனதில் தேவையில்லாத சிந்தனை உண்டாகும். தவறானவர்களின் தொடர்பு ஏற்பட்டு சிலரின் வாழ்க்கை தடம் புரளும். தாய்வழியில் பிரச்னைகள் உருவெடுக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், வேலையில் நெருக்கடி ஏற்படும். மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால் நிம்மதியற்ற நிலை இருக்கும். உறவுகளுக்கும் உங்களுக்குமிடையே பிரச்னை அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள முயற்சித்தும் முடியாமல் போகும். பிள்ளைகளின் செயல்பாடு உங்களைப் பெரிய அளவில் பாதிக்கும். அவர்களைப் பற்றிய கவலை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரம் பெரிதாகி வம்பு, வழக்கு என்று செல்லும். உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும்.

ராகு, கேது சஞ்சாரம் 
சுகஸ்தானமான 4ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். புதிய நட்புகளால் தடுமாற்றமும் தடமாற்றமும் ஏற்படும். ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தொழிலில் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். போட்டியாளரால் வியாபாரத்தில் பின்னடைவு ஏற்படும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலருக்கு மெமோ, இடமாற்றம் ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்  
ஏப்.14 – மே 14, ஆக. 17 – அக். 10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்கள் உங்கள் நெருக்கடிகள் எல்லாம் நீங்கி யோகம் உண்டாகும் காலமாகும். சூரியனின் 3, 6, 10, 11ம் இட சஞ்சாரத்தால் உங்கள் நிலை உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் தெளிவு ஏற்படும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் தன்  சஞ்சாரத்தால் உங்கள் நிலையை உயர்த்துவார். வருமானத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வம்பு, வழக்குகளில் இருந்து விடுவிப்பார். வியாபாரத்தில் முன்னேற்றம், லாபத்தை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன் 
குரு பகவான் 8ம் இடத்தில் சஞ்சரித்தாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அவர் அஸ்தமனம் அடைவதால் பாதிப்பு இல்லாமல் போகும். அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும்  குருவும், குரு பார்வைகளும், சூரியனும், செவ்வாயும்  யோகப் பலன்களை வழங்குவர்.

தொழில் 
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மார்க்கெட்டிங், உணவகம், ரசாயனம், மருந்தகம், ஆயில் ஸ்டோர், கமிஷன் ஏஜன்சி, பிரிக்‌ஸ்,  இயந்திரத் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர், பங்குச்சந்தை, ஆன்லைன், வேளாண்மைத் தொழில்களில் ஆதாயம் கூடும்.

பணியாளர்கள் 
அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் ஊதிய உயர்வும் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டு வாய்ப்பை தேடிச் செல்வர்.

பெண்கள் 
குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைக்குரிய அடிப்படை வசதி அமையும். சுயதொழில் லாபம் தரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொன், பொருள் சேரும்.

கல்வி 
இக்காலத்தில் படிப்பின் மீது கூடுதல் அக்கறையை செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும். தவறான நட்புகளை கைவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதால் உயர்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை 
சுக ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பரம்பரை நோய் தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இக்காலத்தில் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. 

குடும்பம் 
குரு பார்வையால் குழப்பம் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் மீது அக்கறை உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். மதிப்பு உயரும்.

பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் எல்லாம் பறந்தோடும். 

கேட்டை.. குருபார்வையால் நன்மை

அறிவுகாரகனான புதனை நட்சத்திர அதிபதியாகவும், பூமிகாரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியானவர்கள். உங்கள் அறிவாற்றலால் உயர்வான இடத்தை எட்டிப் பிடிக்கக் கூடியவர்கள். செல்வாக்கோடு வாழ்ந்திடக் கூடியவர்கள். அத்தகைய ஆற்றல் கொண்ட உங்களுக்கு விவேகம், வித்தை, அந்தஸ்திற்கு காரகனான குரு மே 11 முதல் அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். குரு உங்களுக்கு 2ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திற்கும், 5ம் இடமான பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். அத்தகைய குருபகவான் 8ம் இடமான மறைவு ஸ்தானத்திற்குள் செல்வதால் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் கேள்விக்குறியாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வரவு, செலவில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். நினைத்த காரியங்களை நடத்த முடியாமல் போகும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். பிள்ளைகளால் நெருக்கடி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். அந்நிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும். உடலில் நோய் பாதிப்பு ஏற்படும். தாராளமாக செலவு செய்த நிலை மாறி அவசிய செலவிற்கும் கடன் வாங்கும் நிலை ஏற்படும். இவை எல்லாம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உண்டாகும் பலன்களாகும்.

பார்வைகளின் பலன் 
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வை எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். விற்பனை ஆகாமல் இருந்த இடங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். கடன் தொல்லை, வழக்குகள் தீரும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வேலையின் காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். மன வேற்றுமையின் காரணமாக பிரிந்தவர்களும் மீண்டும் ஒன்றாவர்.  ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு சரியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். சிலர் சொந்த வீடு வாங்கி குடியேறுவர். 

சனி சஞ்சாரம்  
2026 மார்ச் 6 வரை, சுக ஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ப ஆதாயம் இல்லாமல் போகும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தவறானவர்களின் தொடர்பு ஏற்பட்டு சிலரின் வாழ்க்கைத் தடம் புரளும். மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால், உங்கள் வேலைகளில் குழப்பம் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். உறவுகளுக்கும் உங்களுக்குமிடையே பிரச்னை அதிகரிக்கும். பிள்ளைகளைப் பற்றிய கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் வம்பு, வழக்கு என்று உண்டாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், மனம் அலை பாயும். தவறான நபர்களின் நட்பால் வாழ்க்கை தடுமாறும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தொழிலில் தடைகள் அதிகரிக்கும். முதலீட்டிற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். வேலை பார்க்கும் இடத்தில் நெருக்கடி ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்  
ஏப். 14 – மே 14, ஆக.17 – அக்.10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்கள் சூரியன் உங்களுக்கு யோகப் பலன்களை வழங்கும் காலமாகும். தன் 3, 6, 10, 11ம் இட சஞ்சாரத்தால் உங்களுக்கிருந்த நெருக்கடியை இல்லாமல் செய்வார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். உடல் பாதிப்புகளை நீக்குவார். தொழில், வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார்.

செவ்வாய் சஞ்சாரம் 
ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் தன்  சஞ்சாரங்களால் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். தொண்டர்கள் ஆதரவாக செயல்படுவர்.  வம்பு, வழக்கில் இருந்து விடுவிப்பார். 

பொதுப்பலன் 
குரு 8ம் இடத்தில் சஞ்சரித்தாலும், உங்கள் நட்சத்திராதிபதியின் ஆட்சி, வீடு என்பதால் பெருமளவில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அவர் அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் பாதிப்பு இல்லாமல் போகும். அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும், ஆண்டு முழுவதும் அவரது பார்வைகளும், சூரியனும், செவ்வாயும் உங்களுக்கு நன்மைகளை அதிகரிப்பர்.

தொழில் 
10ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். நிதி நிறுவனம். ஷேர் மார்க்கட், ஆன்லைன் வர்த்தகம், கமிஷன் ஏஜன்சி, இண்டஸ்ட்ரீஸ், கம்ப்யூட்டர், ஸ்டேஷனரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ். உணவகம், ரசாயனம், மருந்தகம், ஆயில் ஸ்டோர், வேளாண்மைப் பொருட்கள், உணவு பொருட்கள். மளிகை லாபம் தரும்.

பணியாளர்கள் 
ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு பிரச்னைகள் உண்டாகும். இக்காலத்தில் தவறுகள் செய்யாமல், நேர்மையாக செயல்படுவதும், பொறுப்புணர்ந்து வேலை பார்ப்பதும் மட்டுமே உங்களுக்கு நன்மையளிக்கும்.

பெண்கள் 
மாங்கல்ய ஸ்தானமான 8ம் இடத்தில் குரு சஞ்சரித்தாலும், அவரது பார்வைகள் குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால், பிறந்த குடும்பத்திலும் புகுந்த குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டாகும். படிப்பு, வேலை என்ற கனவு நனவாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கல்வி 
வாக்கு ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் படிப்பில் ஆர்வம் உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை 
சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு கூடும்.

குடும்பம் 
குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை கூடும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தன் குடும்பம் என்ற எண்ணம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கையில் அக்கறை உண்டாகும். கடன் வாங்கியாவது புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சமூக அந்தஸ்து உயரும்.

பரிகாரம்: சோமநாதேஸ்வரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை) »
temple news
அசுவினி; குருபார்வையால் நன்மை.. செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ... மேலும்
 
temple news
புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான ... மேலும்
 
temple news
மகம்.. நினைப்பது நடந்தேறும்; ஞான மோட்சக்காரகன் கேது பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar