Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வசந்த ... தென் திருப்பதியில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் தென் திருப்பதியில் கருட வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறை வழிபாடு மட்டுமே, இளைய தலைமுறையினரை வழிநடத்தும்
எழுத்தின் அளவு:
இறை வழிபாடு மட்டுமே, இளைய தலைமுறையினரை வழிநடத்தும்

பதிவு செய்த நாள்

09 மே
2025
02:05

பந்தலூர்; பந்தலூர் அருகே பொன் ஆணி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில், நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் தொடர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆச்சாரியார் ஸ்ரீ வியாசன் அமனகரா தலைமையிலான குழுவினர் பங்கேற்று, கிருஷ்ண பகவானின் வாழ்க்கை வரலாற்றை, பல்வேறு பூஜைகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இதன் இறுதி நாள் நிகழ்ச்சியில் காலை மகா கணபதி ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாமம், புத்தக பூஜை, பாகவத கீர்த்தனம் ஆகியவற்றுடன் துவங்கியது. தொடர்ந்து மஹா மிருத்துஞ்ஜயஹோமம் நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீ வியாசன் பேசுகையில், இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்று, மேலை நாடுகளில் வேலை செய்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் குழந்தைகளை வளர்ப்பதால், ஆன்மீகத்தின் மீதான நாட்டம் குறைந்து, தற்போது பல்வேறு தீய செயல்களில் இளைய தலைமுறை ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக போதை பொருட்கள் கடத்துவது மற்றும் பயன்படுத்துவது போன்றவற்றால், இந்தியாவின் எதிர்காலத்திற்கு பலமுள்ள தலைமுறைகள் உருவாகாமல் போய்விடும். இதனை தவிர்க்க தங்கள் குழந்தைகளை ஆன்மீகத்தின் மீதான பற்றுதலை ஏற்படுத்தவும், கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் அவ்வப்போது ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்தவும் அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பூஜையில் நீலகிரி மாவட்டம் மற்றும் வயநாடு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நைவேத்தியம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தோடர் சமுதாய மக்களும் காணிக்கை செலுத்தி பூஜையில் பங்கேற்றனர். பூஜைகளை ஸ்ரீ வியாசன் தலைமையில்,மேல் சாந்தி வைசாக் சர்மா, பிஜு பணிக்கர், சசிதரன் நாயர், பாபு ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் மேல் சாந்தி சுதீஷ்குமார், தர்மகர்த்தாக்கள் பிரபாகரன், சஜி, தலைவர் புஷ்பாகரன், பொதுச் செயலாளர் உன்னிகிருஷ்ணன், பொருளாளர் சந்தியா, ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக ... மேலும்
 
temple news
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar