தென் திருப்பதியில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2025 02:05
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், ஸ்ரீனிவாச பரிணய உற்சவத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி வலம் வந்தார்.
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையம் பகுதியில் தென் திருப்பதி திருமலை ஸ்ரீ வாரி ஆலயம் உள்ளது. இங்கு ஸ்ரீ பத்மாவதி, ஸ்ரீனிவாச பரிணய உற்சவம் கடந்த 6ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடந்தது. உற்சவத்தின் முதல் நாளான 6ம் தேதி, ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜவாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி தேரிலும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்கள். இரண்டாம் நாளான 7ம் தேதி ஸ்ரீ மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் வலம் வந்தார். மூன்றாம் நாளான நேற்று ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வலம் வந்தார். பின் மாலை நேர பூஜைகள் முடிந்து, பூலாங்கி சேவா, ஏகாந்த சேவை ஆகியவைகளுடன் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.