ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை அறநிலையத்துறை இணை ஆணையர் பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் ராஜகோபுரங்களின் மீது கீற்று கட்டப்பட்டு இருந்தது.இது குறித்து பாரதி என்பவர், கீற்று கட்டப்பட்டிருப்பதால் விபத்து அபாயம் உள்ளது என போனில் தெரிவித்த புகாரின் பேரில் அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், கீற்றுகளை அகற்றி தீப்பிடிக்காத தார்பாலின் கட்ட உத்தரவிட்டார். அதன் பேரில் கோவில் கோபுரத்தைச் சுற்றிலும் தீப்பிடிக்காத தார்பாலின் கட்டப்பட்டு பணிகள் நடந்தது. இப்பணியினை அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் பார்வையிட்டு திருப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். கோவில் ஆய்வாளர் பத்மாவதி, செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், கணக்கர் வீரராகவன் உட்பட பலர் உடனிருந்தனர்.