பிரசாதத்தை பிடுங்கி தின்னும் ஆடுகள் பக்தர்கள் புலம்பல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2012 11:12
திருத்தணி: முருகன் மலைக் கோவில் வளாகத்தில், ஆடுகள் சுற்றித் திரிவதால், பக்தர்கள் கோவில் பிரசாதங்கள் சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில பக்தர்கள், அங்கு விற்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக, 15 ஆடுகள் கோவில் வளாகத்தில் சுற்றித் திரிகின்றன. இவை பக்தர்கள் சாப்பிடும் பிரசாதங்களை கையில் இருந்து பிடிங்கி சாப்பிடுகின்றன. இதனால் மலைக் கோவில் வளாகம் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், ""மலைக்கோவிலில் சுற்றி வரும் ஆடுகள், மலைப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு சொந்தமானது. அவற்றை கோவில் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.