பதிவு செய்த நாள்
13
டிச
2012
11:12
ஊட்டி: உலக அமைதி வேண்டி, ஊட்டியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், திரளான மக்கள் பங்கேற்றனர். ரமண மகரிஷி சன்மார்க்க பக்தி சங்கம் - யுனிராம் சார்பில், உலக அமைதியை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 600 கிராமங்களில், ஜோதி யாத்திரை நடந்தது. நேற்று காலை, ஊட்டி எச்.ஏ.டி.பி., விளையாட்டு மைதானத்தில், உலக அமைதி தின நிகழ்ச்சி துவங்கியது. ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுகாத்மானந்தா பேசுகையில், ""அன்பு, அமைதியை மறந்து மேற்கொள்ளப்படும் செயல்களால், உண்மையான வெற்றியை பெற முடியாது, என்றார். மதியம், 12 மணி, 12 நிமிடம், 12 வினாடியில், உலக சமாதானத்தை வலியுறுத்தி, சங்கொலி எழுப்பப்பட்டது. அனைத்து மத தலைவர்கள், மைதானத்தில் கூடியிருந்தோர், பல்லாயிரம் விளக்குகளை ஏற்றி, மவுனப் பிரார்த்தனை நடத்தினர்; பின், 50 புறாக்கள் பறக்க விடப்பட்டன. ஆன்மிக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சத்யானந்த மகராஜ் சுவாமி, தலைமை வகித்தார். நீலகிரியில் உள்ள, 600 கிராமங்களில், அமைதியை வலியுறுத்தி, தீபங்கள் ஏற்றப்பட்டன.