Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : வைகாசி ராசி பலன்  துலாம் : வைகாசி ராசி பலன் துலாம் : வைகாசி ராசி பலன்
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (15.5.2025 முதல் 14.6.2025 வரை)
கன்னி : வைகாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
கன்னி : வைகாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மே
2025
05:05

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். கடந்த மாதம் இருந்த நெருக்கடி இந்த மாதம் இல்லாமல் போகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். அந்நியரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசு வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மனதிற்குள் ஒருவித அச்சமும், பயமும் இருந்து கொண்டே இருக்கும். இந்த நேரத்தில் மே 31 முதல் சுக்கிரன் மேஷத்தில் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். புத பகவானின் சஞ்சாரம் ஜூன் 2 வரை சாதகமாக இல்லை என்பதால் ஷேர் மார்க்கெட், அதிர்ஷ்ட வாய்ப்பு போன்ற விவகாரம் இழுபறியாகும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரித்தாலும் அவரால் லாபத்தை வழங்க முடியாமல் போகும். இருந்தாலும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் தன் பார்வையால் நன்மையைச் செய்வார். சந்தோஷத்தை ஏற்படுத்துவார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லையில் இருந்து விடுவிப்பார். வம்பு வழக்கு இல்லாமல் நடமாடக்கூடிய நிலை உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். முதியோர்களுக்கு ஏற்பட்ட ஆரோக்ய குறைபாடு சீராகும். மாதத்தின் பிற்பகுதியில் பொன் பொருள் சேரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மே 24, 25.
அதிர்ஷ்ட நாள்: மே 19, 23, 28. ஜூன் 1, 5, 10, 14.
பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நன்மை உண்டாகும்.

அஸ்தம் 
திடமான சிந்தனையும், பணிவான செயல்பாடுகளும் கொண்டு வாழ்வில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உங்கள் ஆற்றலை அதிகரிப்பர். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பர். வியாபாரம் தொழிலில் இருந்த தடைகளை இல்லாமல் செய்வர். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான நிலையை உண்டாக்குவர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை  விலகும். பத்தாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் வேலைகளில் நெருக்கடி உண்டாகும்.  அவருடைய பார்வைகள் 2, 4, 6 ம் உண்டாவதால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பண வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தாய் வழி உறவுகளால் லாபம் உண்டாகும்.  நேற்று நிறைவேறாமல் இருந்த விருப்பம் நிறைவேறும். எல்லாவற்றிலும் வெற்றி என்ற நிலையை அடைவீர். புத பகவானின் சஞ்சாரம் ஜூன் 2 முதல் சாதகமாக இருப்பதால் புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட இழப்புகளை சரி கட்டுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். விரயாதிபதி சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவு கட்டுப்படும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் வேளாண்மையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் இனி இல்லாமல் போகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் நிலையை நினைத்து வாழத் தொடங்குவீர்கள். ஒரு சிலர் புதிய வியாபாரம் தொடங்கி லாபம் காண்பீர். சிறு வியாபாரிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட நோய் விலகும். ஆரோக்கியம் சீராகும்.
சந்திராஷ்டமம்: மே 25, 26.
அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.

சித்திரை 1, 2 ம் பாதம்
அறிவாற்றலுடன் துணிச்சலாக செயல்பட்டு முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, இந்த மாதம் முன்னேற்றமான மாதமாகும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவர் நீச்சம் அடைந்திருப்பதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அதே நேரத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் போட்டி போட்டுக் கொண்டு உங்கள் நிலையை உயர்த்துவர். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிப்பர். உங்கள் செல்வாக்கு உயரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து குடும்பத்திற்குள் குழப்பத்தை உருவாக்கி வந்த சுக்கிரன், மே 31 முதல் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அந்நியரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கையே சூனியம் வைத்ததுபோல் இருந்த நிலை மாறும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செலவுகள் ஏற்படும். அவர் ஜென்ம ராசியை விட்டு பெயர்ச்சியாகி இருப்பதே மிகப்பெரிய யோகம். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி, போராட்டம் எல்லாம் இல்லாமல் போகும். குரு பகவான் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பம், தொழில், உடல்நிலை அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தனியார் நிறுவனப் பணியாளர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவார்கள். கலைஞர்களுக்கு ஜூன் 2 முதல் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.
சந்திராஷ்டமம்: மே 26.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன். 5, 9, 14.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும்.

 
மேலும் வைகாசி ராசி பலன் (15.5.2025 முதல் 14.6.2025 வரை) »
temple news
அசுவினி: நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எதிலும் தனித்து நின்று சாதனைப் படைத்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்சாமர்த்தியமாக சாதனைகள் புரிந்துவரும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்தெளிந்த ஞானமும்,  செல்வாக்கும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
மகம்மனதில் நினைத்ததை நடத்தி முடித்திட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar