Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ... மதுரை சித்திரை திருவிழா: விடிய விடிய நடந்த தசாவதாரம்.. பக்தர்கள் பரவசம் மதுரை சித்திரை திருவிழா: விடிய விடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷத்துடன் பாலமலை ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷத்துடன் பாலமலை ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

13 மே
2025
05:05

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் விமர்சையாக நடந்தது.


பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாலமலையில் ரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேர் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் ரங்கநாதர் தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்தாம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பு நடந்தது. 11ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை யானை வாகன உற்சவமும், அதையடுத்து சின்னத்தேர் உற்சவமும், மாலை, 6:00 மணிக்கு பெரியதிருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்தனர். இன்று செவ்வாய்க்கிழமை பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம் நடந்தது. நாளை சேஷ வாகன உற்சவம் மற்றும் தெப்போற்சவம் நடக்கிறது. நாளை சந்தன சேவை சாற்றுமுறை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar