பதிவு செய்த நாள்
16
மே
2025
07:05
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி, ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் திருக்கோவிலில், 26ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. கடந்த, 4ம் தேதி கிராம சாந்தியும், 5ம் தேதி அபிஷேகம், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி அம்மன் தங்க காப்பு அலங்காரம், 12ம் தேதி காலை, 7:00 மணிக்கு அபிஷேகம், இரவு, 10:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 13ம் தேதி இரவு, 8:00 மணிக்கு அம்மனுக்கு நகைச்சீர், பட்டு கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம் நடந்தது. 14ம் தேதி காலை, 7:30 மணிக்கு சக்தி கரகம் அழைப்பு, அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல் தொடர்ந்து, 10:00 மணிக்கு அக்னி அபிஷேகம், முற்பகல், 11:45 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மாலை, 3:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.