பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2025 10:05
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார். வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் மூலவர் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் வெண்ணை காப்பு கவசத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.