எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2025 09:05
அவிநாசி; அவிநாசி அருகே எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர்,ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ எல்லப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
அவிநாசி வட்டம், கருமாபாளையம் ஊராட்சி பெரிய வயக்காட்டுத் தோட்டம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ எல்லப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.