பதிவு செய்த நாள்
17
மே
2025
10:05
புதுச்சேரி: மூலக்குளம் முத்துமாரியம்மன் கோவில், மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மூலக்குளம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 14ம் தேதி கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, நவகிரக ஹோத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், நடந்தது.
தொடர்ந்து, நேற்று நான்காம் பூஜையும், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 9:00 மணியளவில், விநாயகர், முருகன், சமயபுரத்தம்மன், நாகர், துர்க்கை ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடந்து, மூலவம் முத்துமாரியம்மன் கோவில், விமானத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர். அன்று இரவு அம்மன் வீதியுலா நடந்தது.