தென்னக காசி பைரவர் கோவிலில் பக்தர்களே பைரவருக்கும் பால் அபிஷேகம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2025 11:05
ஈரோடு; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தென்னக காசி பைரவர் கோவிலில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே ஸ்வர்ண லிங்கத்திற்கும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கும் பால் அபிஷேகம் செய்தனர்.
தென்னக காசி பைரவர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் ஆசியாவிலேயே மிக உயரமான 39 அடி உயர பைரவர் திருக்கோவில், ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை இராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ளது. அடுத்த இக்கோவிலின் நுழைவாயிலில் 39 அடி உயர பிரம்மாண்ட காலபைரவர் சிலை அமைந்துள்ளது. மேலும் மூலவராக ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கின்றார். பைரவருக்கென்றே அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட ஆலயத்தில் 64 பைரவ அவதாரங்களையும் தரிசனம் செய்வது சிறப்பு. இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் கருவறைக்குள்ளேயே சென்று தங்கள் கைகளாலேயே ஸ்வர்ண லிங்கத்திற்கும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.