திருப்பதியில் மைசூர் ராஜமாதா; 100 கிலோ அகண்ட விளக்கு நன்கொடை வழங்கி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2025 03:05
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மைசூர் ராஜமதா இரண்டு அகண்டங்கள் (ராட்சத விளக்குகள்) நன்கொடையாக வழங்கி வழிபட்டார்.
நேற்று திங்கட்கிழமை மைசூர் ராஜமாதா ஸ்ரீ பிரமோதா தேவியால் திருமலை கோயிலுக்கு இரண்டு பெரிய வெள்ளி அகண்டங்கள் (பெரிய விளக்குகள்) நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த அகண்டங்கள் கருவறைக்குள் ஏற்றி வைக்கப்படும் பாரம்பரிய மாபெரும் விளக்குகள் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (300 ஆண்டுகளுக்கு மேலாக) மைசூர் ராஜா இந்த அகண்டங்களை நன்கொடையாக அளித்தார். ஒவ்வொரு வெள்ளி அகண்டத்தின் எடை சுமார் 50 கிலோ. இவை திருமலை கோயிலில் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, கூடுதல் அலுவலர் சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.