சின்னாளபட்டி மகா முத்து மாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2025 10:05
சின்னாளபட்டி; பிள்ளையார்நத்தம் மகா முத்து மாரியம்மன் கோயில் விழாவிற்காக, குடகனாற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களின் தீர்த்தம் குட ஊர்வலம் நடந்தது. ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார் நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். விழாவின் சிறப்பம்சமாக, அம்மன் அபிஷேகத்திற்காக குடக நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களின் தீர்த்தக் குட ஊர்வலம் நடக்கும். இந்த ஆண்டிற்கான விழா, நேற்று முன்தினம் பூச்சொரிதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல் நடந்தது. முன்னதாக பிள்ளையார்நத்தத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக குடகனாறு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீர்த்தம், பால்குட ஊர்வலத்தை துவக்கினர். அனுமந்தராயன்கோட்டை பித்தளைப்பட்டி திண்டுக்கல்-குமுளி 4 வழி சாலை வழியே ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், பால் அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ரத ஊர்வலம், வாண வேடிக்கை, அன்னதானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.