Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பு இல்லாத பழையசீவரம் கோவில் ... காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம் காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவரம் வரமுக்தீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
சோழவரம் வரமுக்தீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

21 மே
2025
05:05

சோழவரம்; சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், 2,000 ஆண்டுகள் பழமையான காமாட்சி அம்பாள் உடனுறை வரமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2015ல் திருப்பணிகள் துவங்கப்பட்டன. இங்குள்ள பாலமுருகன், குபேர விநாயகர், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னிதிகள் ஒவ்வொன்றாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்தன. தற்போது, 54 லட்சம் ரூபாயில் ராஜகோபுரம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது, நான்கு நிலைகளை கொண்ட, 165 அடி உயரம் உடையது. இதில், 216 சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிமென்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு, அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் ராஜகோபுர திருப்பணிகள் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: இக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த வாயு தலமாகும். இங்கு, சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. கருவறை தீபம் கமலதீபமாக காட்சியளிக்கிறது. சித்தர்கள் தவமிருந்த தலம் என, கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கோவில் சிதிலமடைந்து, தற்போது திருப்பணிகள் நடக்கிறது. தற்போது, நிதி ஆதாரம் தான் பிரச்னையாக இருக்கிறது. பக்தர்கள் முன்வந்து திருப்பணிகளுக்கு உதவி செய்தால், விரைவாக பணிகளை முடித்துவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை xஅரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ... மேலும்
 
temple news
அவிநாசி; காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar