காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2025 05:05
கமுதி; கமுதி அருகே காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு காமாட்சியம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டப்பட்டது.பின்பு வைகை ஆற்றங்கரையில் கும்பம் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. மே 26ல் விளக்குபூஜை, மே 27ல் பொங்கல் உற்சவம்,மே 28ல் பக்தர்கள் பால்குடம்,பூச்சொரிதல் விழா,மே 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு தினந்தோறும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊர்வலம் நடைபெறும்.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கௌரவ செட்டியார்கள் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.