வில்லியனுார் வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 10:05
புதுச்சேரி; வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்திற்கு, ஸம்வத்ஸரா அபிஷேகத்தை (கும்பாபிஷேக தினம்) முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. விழாவில், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.