திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 11:05
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் வட்டார ஹிந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் உற்ஸவம் மே 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர். மே 20ல் விளக்கு பூஜை, நேற்று பக்தர்கள்முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மே 27 இரவு மறுபூஜை நடக்கிறது. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.