உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் பூச்சாற்று உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 11:05
திருச்சி; உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் பூச்சாற்று உற்சவம் சிறப்புடன் துவங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலாக விளங்கும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், வைணவ திவ்யதேசத் தலங்களில் 2வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் நடைமுறைகள் இங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கும் நம்பெருமாள் தான் உற்சவர். சிறப்பு மிக்க இத்தலத்தில் பூச்சாற்று உற்சவம் (உள்கோடை) நேற்று துவங்கியது. முதல் நாளில் நாச்சியார், புஷ்பம் சாத்துப்படி கண்டருளி சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.