சிங்கம்புணரி; கோபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக கவர்னர் இன்று (மே 22) சிங்கம்புணரி வருகை தந்தார்.
சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகமூர்த்தி கோசாலை டிரஸ்ட்டின் 10ம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ஆசியுரை வழங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். காலை 8:30 மணிக்கு சிங்கம்புணரி வந்த கவர்னர், சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் முன்பாக உள்ள கோசாலையை பார்வையிட்டார். தொடர்ந்து கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு விழா மண்டபத்துக்கு சென்றார். அங்கு நடைபெற்ற 108 கோபூஜை, யாக பூஜையில் பங்கேற்றார்.