மேற்கு எல்லையின் நம்பிக்கை தெய்வமான கர்ணி மாதா கோவிலில் பிரதமர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 12:05
ராஜஸ்தான்; பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலில் வழிபாடு செய்தார்.
மேற்கு எல்லையில் காவல் மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாக கர்ணி மாதா உள்ளது. சரண் சமூகத்தின் குலதேவியான கர்ணி மாதா ஆசிகள் மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. ஜெய்சால்மரில் உள்ள தனோட்ட மாதா கோயில் மற்றும் பிகானரில் உள்ள கர்ணி மாதா கோயில் ஆகியவை ஆயுதப்படையின் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலுக்கு இன்று காலை வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோவிலில் சிறப்பு ஆராதனைகள் செய்து பிரதமர் வழிபட்டார். இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இக்கோவிலுக்கு பிரதமர் வருவது இது முதன்முறையாகும். அவருடன் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மாவும் சென்றார். பிரதமர் வருகையை முன்னிட்டு நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து, ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.