Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ... மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்

27 மே
2025
11:05

சென்னை: மதுரையில், ஜூன் 22ம் தேதி நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.


முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில், ஆடு, கோழி பலியிட்டு விருந்து வைக்க, சிலர் முயன்றதை தொடர்ந்து, அங்கு பிரச்னை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களை திரட்டி, ஹிந்து முன்னணி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை, ஹிந்து முன்னணி ஜூன் 22ம் தேதி நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் வாசன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகை தேவயானி உள்ளிட்டோருக்கு, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், நேரில் சென்று அழைப்பு விடுத்தார். சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், இளங்கோவன் ஆகியோர் சீமானை சந்தித்து, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். நேற்று சென்னை வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பக்தவத்சலம், மனோகர் நேரில் சந்தித்து, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar