ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நடை திறப்பில், நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: மார்கழி 1ம்தேதி (டிச.,16) முதல், ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 4 முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, பின்னர் இதர பூஜைகள் நடைபெறும். பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மதியம் 3 க்கு, மீண்டும் திறக்கப்படும். இரவு 8 மணிக்கு சாத்தப்படும், என்றார்.