திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2025 05:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
அக்னி நட்சத்திர நிறைவை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் நடைபெற்ற அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜையில் அஷ்டோத்திர சத 1008 கலசாபிஷேகம் சிறப்பு யாகம் நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கலசம், மூலவர் வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இன்று காலையில் தோஷ நிவர்த்தி நான்காம் கால யாகம் முடிந்து, சிவாச்சாரிகள் மூன்றாம் பிரகாரம் சுற்றி வந்து, மூலவர் சன்னதிக்கு புனித நீர் கொண்டு சென்று அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.