திருமால்பூர் சுந்தர வரதர் கோவில் கருட வாகனம் புதுப்பொலிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2025 03:05
திருமால்பூர்: காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூரில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் கருடசேவை உத்சவத்தின்போது, சுவாமி வீதியுலா செல்லும் கருட வாகனம் பொலிவிழந்த நிலையில் இருந்தது. இந்த வாகனத்தை புதுப்பிக்க, கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, கருட வாகனம், புதுப்பொலிவு பெறும் வகையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமணா கலைக்கூடத்தினர், கருட வாகனத்தை சீரமைத்து, ஒரிஜினல் தங்க இதழ் ஒட்டி வண்ணகற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 9ல் வைகாசி விசாக தினத்தன்று புதுப்பிக்கப்பட்ட கருட வாகனத்தில், சுந்தர வரதராஜ பெருமாள் வீதியுலா வருவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.