Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நலன் வேண்டி சூலுார் ... வைகாசி விசாக விழா: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் வைகாசி விசாக விழா: முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் திருநட்சத்திரம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் திருநட்சத்திரம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
01:06

காரமடை; கோவை மாவட்டம், காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் உற்சவமூர்த்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் முக்கியமானவர் நம்மாழ்வார். இவரது அவதார தினமான வைகாசி விசாகம் அனைத்து வைணவ திருக்கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும்.  அதன்படி, கோவை மாவட்டம், காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நேற்று அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கால சந்தி பூஜை முடிந்து ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவ மூர்த்தியை ராமானுஜர் சன்னதியில் எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம் கலச ஆவாஹனம் மூலவர் ராமானுஜர் மற்றும் நம்மாழ்வார் உற்சவமூர்த்திக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. நம்மாழ்வார், சிறப்பு பட்டுடுத்தி வெள்ளி சப்பரத்தில் மேளதாளம் முழங்க வெண்பட்டு குடை சூழ ரங்க மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் முன் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதரிடம் இருந்து மாலை, சந்தனம், சடாரி பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர் திருமலை நாலான் சக்கரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் ரங்கநாதரிடம் இருந்து மாலை சடாரி மரியாதை பெற்றுக் கொண்ட உற்சவமூர்த்தி நம்மாழ்வார் இராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், திருக்கோவில் நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar