பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.36 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2025 11:06
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.36 கோடி காணிக்கையாக கிடைத்தது.
பழநி கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் எண்ணிக்கையில் ரூ. 2 கோடியே 36 லட்சத்து 5 ஆயிரத்து 903, வெளிநாட்டு கரன்சி 500, எண்ணங்கள், தங்கம் 355 கிராம் வெள்ளி 5.961 கிலோ கிடைத்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ ஓம் சிவ சேவை குழு தொண்டர்கள், கல்லூரி மாணவர்கள், கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் எணணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்கள் வெங்கடேஷ், ஹர்ஷினி, உதவி ஆணையர் லட்சுமி, முதுநிலை கணக்கு அலுவலர் குருநாதன், மேலாளர் முருகானந்தம், சரக ஆய்வர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.