Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கராபுரம் முத்து மாரியம்மன் ... சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
05:06

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் நடந்த திருவிழாவில், பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில், புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு,ஆண்டுதோறும் திருநங்கைகள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா மற்றும் கோவில் புதுப்பிக்கும் பணி நடந்ததால், கடந்த ஐந்து ஆண்டாக திருநங்கைகள் திருவிழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு, திருநங்கைகள் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மஹாபாரதம், அர்ச்சுனன் துரோபதி திருக்கல்யாணம் சாமி வீதியுலாவும், விராட பருவம் என்னும் மாடு பிடி வைபவம் நடந்தது. சாமி வீதியுலா நிகழச்சிகள் நடந்தது. முக்கிய விழாவான நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கோவிலை வலம் வந்து, கோவில் முன்பு பூசாரி கையால் தாலிக்கட்டிக்கொண்டனர். திருநங்கைகள், சாமி தரிசனம் செய்து விட்டு, ஆட்டம், பாட்டத்துடன் விடிய, விடிய கோவிலை வலம் வந்தனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர்கள் மற்றும் கொத்தட்டை, சின்னக்குமட்டி, அத்தியாநல்லுார் கிராம மக்கள் செய்திருந்தனர் விழாவில் இன்று அதிகாலை தேரோட்டமும், அலங்கரிக்கப்பட்ட தேரில் வாண வேடிக்கையுடன் சாமி வீதியுலா காட்சியும், அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar