Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் அருகே கண்டறியப்பட்ட ... சங்கராபுரம் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசை சங்கராபுரம் அம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வரன் கோயில் நதிக்கரையில் குவிந்துள்ள நேர்த்திக்கடன் விளக்குகள்
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வரன் கோயில் நதிக்கரையில் குவிந்துள்ள நேர்த்திக்கடன் விளக்குகள்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2025
11:06

சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் முன் ஓடும் சுரபி நதிக் கரையில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திய தீபங்கள்,வடை சட்டிகள் குவித்துள்ளதால் குளிக்க செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.


குச்சனூரில் சனீஸ்வரபகவானுக்கென தனிக் கோயில் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. சுயம்புவாக எழுந்தருளியுள்ள இந்த கோயிலில் முன் பகுதியில் சுரபி நதி செல்கிறது. பக்தர்கள் இந்த நதியில் குளித்து நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்வார்கள். ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் கூட்டம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பெருந்திருவிழா நடைபெறும். ஆடி மாதம் வரும் நான்கு சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பறைகள் என எதுவும் இல்லை. நதியில் குளிக்கும் பெண்கள் உடை மாற்ற ஒரே ஒரு அறை உள்ளது அதுவும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திய விளக்குகளும், சிறிய வடைச்சட்டிகளும் பக்தர்கள் குளிக்கும் சுரபி நதிக்கரையில் கொட்டி வைத்துள்ளனர். இவற்றை அகற்றி நதிக்கரைகளை சுத்தம் செய்ய வேண்டும். கோயில் முன்புறம் உள்ள படித்துறைகளின் வடக்கு பக்கம் உள்ள படித்துறை குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால் நதியில் இறக்க பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோயிலில் அடிப்படை வசதிகள், சுகாதாரம் மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar