பதிவு செய்த நாள்
17
டிச
2012
11:12
வேதாரண்யம்: இரு கோவில்களின் திருப்பணிக்காக, அறநிலையத்துறை சார்பில் தலா, 50 ஆயிரம் ரூபாய் என, ஒரு லட்சம் ரூபாய் நிதியை எம்.எல்.ஏ., காமராஜ் வழங்கினார். தமிழகத்தில், ஆதிதிராவிடர் சமூகத்தினர் பராமரித்து வழிபட்டு வரும் கோவில்களின் திருப்பணிக்காக தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, வேதை வள்ளியம்மை வீரம்மா காளியம்மன் கோவில், பஞ்சநதிக்குளம் மேற்கு காளியம்மன் கோவில் ஆகிய, இரு கோவில்களிலும் திருப்பணி செய்ய, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கான செக்கை எம்.எல்.ஏ., காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாகை அறநிலையத்துறை உதவி கமிஷனர் குமரேசன், முன்னாள் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சிவானந்தம், ஆய்வாளர் பழனித்துரை, மாவட்ட அ.தி.மு.க., பிரதிநிதி வீரராசு, வார்டு செயலாளர்கள் முனியப்பன், வீரமுத்து, கோவில் நிர்வாகி அடைக்கலசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.