Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை ... பெண்களுக்கு பிடித்தமான மத்தூரம்மா பெண்களுக்கு பிடித்தமான மத்தூரம்மா
முதல் பக்கம் » துளிகள்
சஷ்டி விரதம்; சண்முகனை வணங்கிட சங்கடம் நீங்கும்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சஷ்டி விரதம்; சண்முகனை வணங்கிட சங்கடம் நீங்கும்..!

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2025
10:06

முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். 


முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது சஷ்டி. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் நம்பிக்கை. ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது சகல நன்மையும் தரும். இன்று சஷ்டியில் சண்முகனை வணங்கி சங்கடம் நீங்க பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar