பதிவு செய்த நாள்
22
ஜூன்
2025
01:06
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன.
பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு விஷ்வக்சேனர், ஆராதனம், புண்ணியாக வாசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தன.
அரங்கநாதர் வெண்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார்.