கோவை; கோவை மேட்டுப்பாளையம் நாகசாயி மந்திரில் பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் நுாறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நுாறு சிவாலய ருத்ர பாரயணம் பக்தர்கள் சூழ நடந்தது.
பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் நுாறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு சிவாலயங்கள் தோறும், 100 சிவாலய ருத்ர பாரயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 50 வது சிவாலயமான மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள ஸ்ரீ நாகசாயி பாபா ஆலாயத்தில் ருத்ரபாராயணம் நடந்தது.ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள்( இந்தியா) சார்பில் சாய்பக்தர்கள் ருத்ரபாராயணம் மேற்கொண்டனர். ஏகாதசருத்ரபாாரயணத்தில் சுமார் 200 பேர் சாய்பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சாய்பக்தர்களின் சாய்பஜன் , மங்கள ஹாரத்தியும், பிரசாத வினியோகமும் நடந்தது. பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவால், 1961 பிப்.,26 ல் ஷீரடி சாய்பாபா பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திரளானோர் பங்கேற்றனர் அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.