ஆனி அமாவாசை; மருதமலை பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2025 12:06
கோவை; மருதமலை மெயின் ரோடு ராமசாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு ஆனி மாதம் அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.