மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2025 04:06
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் குழந்தைசுவாமி சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தைசுவாமி சித்தருக்கு இன்று ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு குழந்தை சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மதியம்12:00 மகா பூர்ணாஹூதி நடந்து,கலசங்கள் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. அதேபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திரசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.