நாட்டாமுத்தி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2025 12:06
மேலூர்; உறங்கான்பட்டி நாட்டாமுத்தி அய்யனார் கோயில் ஆனி மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 22 முதல் பக்தர்கள் விரதமிருந்தனர். நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் மந்தையிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கோட்ட நத்தாம் பட்டி சிறுவேஸ்வரி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எட்டு நாட்கள் விரதம் இருந்தனர். நேற்று வெள்ளலூர் மந்தையிலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள அம்மன் கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.