Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இசையின் முக்கியத்துவம்: ஆராய்ச்சி அறிக்கை தயார் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
108 சக்தி பீடங்களை தரிசனம் செய்ய சைக்கிளில் 17 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் பயணம்
எழுத்தின் அளவு:
108 சக்தி பீடங்களை தரிசனம் செய்ய சைக்கிளில் 17 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் பயணம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2025
03:07

உத்தரகோசமங்கை; மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடியைச் சேர்ந்த சன்னியாசி சைக்கிள் மூலமாக 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்வதற்காக இதுவரை 17,800 கி.மீ., பயணம் செய்து வந்துள்ளார். இன்று காலை 11:00 மணிக்கு உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது சைக்கிள் யாத்திரையை தொடர்ந்தார். சீரடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் 60, சன்னியாசியான இவர் சைக்கிள் மூலமாக இந்தியாவில் உள்ள 108 சக்தி பீடங்களையும் தரிசனம் செய்ய முடிவு செய்து கடந்த 2023 ஜன., 23 அன்று மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இருந்து தனது புனித யாத்திரையை துவக்கினார். 


இது குறித்து சன்னியாசி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சைக்கிளில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 கி.மீ., தூரம் பயணிக்கிறேன். செல்லும் இடங்களில் உள்ள கோயில், ஆசிரமம், விடுதி உள்ளிட்டவைகளில் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் சைக்கிளில் பயணம் செய்கிறேன். கடந்த 2023ல் துவங்கிய எனது யாத்திரை மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேஷ், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், நேபாளம், பீகார், அஸ்ஸாம், மேகாலயா திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக தமிழ்நாடு வந்தடைந்து இன்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு உத்தரகோசமங்கை வழியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்ல உள்ளேன்.  பின்னர் மைசூர், சீரடி, மத்திய பிரதேசத்தில் எனது புனித யாத்திரையை நிறைவு செய்கிறேன். சைக்கிளில் சென்று 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்வது உடலுக்கும், உள்ளத்திற்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியவாறு சைக்கிளில் செல்ல துவங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar