கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 20 டன் அரிசியில் அன்ன பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2025 11:07
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் 20 டன் அரிசியால் அன்ன பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத்திட்ட தொண் டர்களால் நன்கொடை யாக பெறப்பட்ட 20 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்ன பூரணி சிலையை மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது. சுவாமி விவேகா னந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ரானடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.