பதிவு செய்த நாள்
04
ஜூலை
2025
12:07
மாமல்லபுரம்; மாமல்லபுரம், பிடாரி கருக்காத்தம்மன் கோவிலில், கும்பாபிஷேக ஒன்பதாம் ஆண்டு நிறைவு உற்சவம் நடைபெற்றது. மாமல்லபுரத்தில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிடாரி கருக்காத்தம்மன் கோவில் உள்ளது. கிராம பொதுக்கோவிலான இதன் கும்பாபிஷேகம் நடந்து, 150 ஆண்டுகள் கடந்ததாக கருதப்பட்ட நிலையில், கோவிலை புனரமைத்து, கடந்த 2016ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்று, ஒன்பதாம் ஆண்டு நிறைவு உற்சவம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலை சாந்தி ஹோமம், கருக்காத்தம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்டோருக்கு அபிஷேகம் செய்து, அலங்கரித்து வழிபாடு நடந்தது. பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, அலங்கார அம்மன் ஊஞ்சல் சேவையாற்றினார்.